fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் என்.ஜி.பி. கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவுரை

டாக்டர் என்.ஜி.பி. கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவுரை

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக வரவேற்பு விழா என்.ஜி.பி.கலையரங்கில் நடை பெற்றது.

கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட் டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசும்போது, கல்வி கற்கும் மாணவர்கள் அறிவை விரிவு செய்து ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பயின்று இந்த கல்வி கற்கின்ற காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றார்.

செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி பேசும்போது, மாணவர்கள் கல்வி கற்கும் திறன் மேம்பாட்டையும் பிற திறமை களையும் இளங்கலை பயிலும் காலத்திலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கற்றல் திறனும் விடா முயற்சியும் ஒரு மனிதனை நிச்சயமாக வாழ்வில் முன்னேற்றமடையச் செய்யும் என்றார்.

கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி.புவனேஸ் வரன் வாழ்த்துரை வழங்கினார்.
டாக்டர் என்.ஜி.பி.கல்லூரியில் முதல்வர் (பொறுப்பு) முனைவர் எஸ்.சரவணன் முதலாமாண்டு பயில வந்துள்ள மாணவர்களை வாழ்த்தி பேசும்போது, இளங்கலைக் கல்வி என்பது மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றமடையச் செய்வதற்கான முதல் படிக்கல், கல்வி கற்கின்ற இந்தக் காலகட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி அடைய வேண்டிய இலக்கை மட்டும் நோக்கியே மாணவர்களின் பயணம் இருக்க வேண்டும்.

எட்ட முடியாத உயரம் என்று இந்த உலகில் எதுவும் இல்லை வானம் கூட தொட்டு விடும் தூரம் தான் என்றார். கணினித்துறைப் பேராசிரியர் வி.எஸ்.ஜெகதீஷ்வரன் விழாவை ஒருங்கிணைத்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img