கோவை சிங்காநல்லூரில் திருச்சி சாலையில் 200 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள என்.ஜி.மருத்துவமனையின் புதிய சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.சி.மனோகரன் மற்றும் தேன்மொழி மனோகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இந்த புதிய சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்தினை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சரவணம்பட்டி கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் ,திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான இ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு அரசின் மாநில வருவாய் நிர்வாக இணை ஆணையர் சிவராசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த புதிய கட்டிடத்தில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் புதிய சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு. ஃபிசியோதெரப்பி மற்றும் ரீஹாபிலிட்டேஷன் பிரிவு மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்அப் பரிசோதனை பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகள் துவக்கப்பட்டன.
பல்வேறு முக்கிய பிரமுகர்களும் மருத்துவர்களும் மருத்துவமனையின் செவிலியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.