இந்தியாவில் நவீன காதலர்கள் குறித்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்தியர்கள் காதலை எப்படி வரையறுத்து வெளிப்படுத்துகிறார்கள் என்னும் சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் டேட்டிங் கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், இன்றைய இளை ஞர்களின் டேட்டிங் விருப்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து பம்பிள் நிறுவனம் ஆய்வை நடத்தியது.
அதில் காதல் உணர்வை மிகுதியாக அதிகரிக்க கூடியவை, காதல் கடிதங்கள் என 63% பேரும், மெழுகுவர்த்தியுடன் கூடிய இரவு உணவு என 66% பேரும், விலை யுயர்ந்த பரிசுகள் என 51% பேரும் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் 39% இளைஞர்கள் காதலர் தினம் மிகைப்படுத்தப் பட்டதாகவும் அதைக் கொண் டாட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்கள். அதே நேரம் காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்புகிற இளைஞர்களின் விகிதமும் 39% ஆகவுள்ளது.
இந்திய இளைஞர்கள் காதலில் நேர்மையை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள், குறிப்பாக பெண்கள் தங்களுக்கான முக்கியத்துவத்தை பெரிதும் விரும்புகிறார்கள்.
கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 42% இளைஞர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் இணையுடன் காட்சி பதிவிடுவதை காதல் உணர்வு என்று கருதுகின்றனர், 34% பேர் அவற்றை கிளிஷே என்று கருதுகின்றனர்.
‘2023-ம் ஆண்டில், மக்கள் தங்கள் விருப்பங்கள், ஆசைகள் மற்றும் தேவைகளில் சமரசம் செய்யாமல், காலாவதியான, பழமையான டேட்டிங் விதிமுறைகளுக்கு சவால் அளிப்பதில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள்.
பெண்கள் உடல் தேவைகளை விட உணர்ச்சி ரீதியான நெருக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். வயது இடைவெளிகள் மற்றும் சமூகத்தின் பார்வை பற்றி கவலைப்படாமல் டேட்டிங் செய்ய தயாராகவுள்ளனர்.
இந்த நேர்மறையான மாற்றங்களில் சில இந்தியாவில் டேட்டிங் கலாச்சாரங்கள் தொடர்ந்து உருவாகி வருவதைப் பார்க்க ஊக்கமளிக்கிறது’ என்று பம்பிள்லின் இந்திய தகவல் தொடர்பு இயக்குநர் சமர்பிதா சமதர் கூறுகிறார்.
யூகோவ் மார்க்கெட் ஆராய்ச்சி
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் 2022 இல் இந்தியாவில் உள்ள 2000 இளைஞர்களிடையே பம்பிள் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட யூகோவ் மார்க்கெட் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட நாடு தழுவிய ஆய்வுகளின் தரவுகளின் படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் முதல் டேட்டிங் மற்றும் சமூக வலைப்பின்னல் பயன்பாடான பம்பிள், 2014ல் விட்னி வுல்ப் ஹெர்ட் என்பவரால் நிறுவப்பட்டது.