fbpx
Homeபிற செய்திகள்அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர்த்திருவிழா கன்னியாகுமரியில் இருந்து குதிரை சவாரி துவக்கம்

அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர்த்திருவிழா கன்னியாகுமரியில் இருந்து குதிரை சவாரி துவக்கம்

அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து 10 நாள் குதிரை சவாரி பயணம் கன்னியாகுமரியில் துவங்கியது.

எதிர்கால தலைமுறையினர் உள்நாட்டு குதிரைகளை வளர்க்கவும், பாதுகாக் கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்நாட்டு குதிரைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் அங்கீகாரம் பெறுதல் ஆகியவற்றின் ஓர் அமைப்பான இன்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி (Indigenous Horse Society) மற்றும்
நிலா குதிரை பயிற்சி பள்ளி இணைந்து கன்னியாகுமரி முதல் அந்தியூர் வரை தொடர்ந்து 10 நாள் குதிரை சவாரி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 28-ம் தேதி கன்னியாகுமரியில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இப்பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழா வரும் 8-ம் தேதி நிறைவடைகிறது.

இக்குதிரை சவாரியில் ஈரோட்டில் அமைந்துள்ள நிலா குதிரை பயிற்சி பள்ளியைச் சேர்ந்த பிரயதர்ஷினி ரங்கநாதன் (வயது 32), சுபத்ரா (வயது 12), மனவ் சுப்பிரமணியன் (வயது 11), கௌதமன் மேவாணி வெற்றி கண்ணன் (வயது 33), ஸ்வாதி விக்னேஸ்வரி (வயது 32) ஆகிய 5 குதிரை வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இவர்களின் இப்பயணம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img