fbpx
Homeபிற செய்திகள்‘எம்.ஜி.ஆஸ்டோரின் பிளாக்ஸ்டார்ம்’ அறிமுகம்

‘எம்.ஜி.ஆஸ்டோரின் பிளாக்ஸ்டார்ம்’ அறிமுகம்

100 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் பிராண்டான எம்ஜி மோட்டார் இந்தியா, இந்தியாவின் அதன் வகுப்பிலேயே மிகவும் மேம்பட்ட எஸ்யூவியான எம்ஜி ஆஸ்டோரின் பிளாக்ஸ்டார்ம் எடிஷனை அறிமுகப்படுத்தியது.

ஆஸ்டர் பிளாக்ஸ்டார்ம் லிமிடெட் எடிஷன் பனோரமிக் ஸ்கைரூஃப், முற்றிலும் கருப்பு நிறத்திலான ஹனிகோம்ப் பேட்டர்ன் கிரில், சிவப்பு நிற ஃப்ரண்ட் பிரேக் காலிப்பர்களுடன் கூடிய பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ஃபினிஷ்
ஹெட்லேம்ப்கள், பளபளப்பான பிளாக் டோர் கார்னிஷ் மற்றும் பிளாக் ஃபினிஷ் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது.

எஸ்யூவியின் முன்பக்க ஃபெண்டர்ஸின் இருபுறமும் ‘பிளாக்ஸ்டார்ம்’ சின்னம் உள்ளது. இந்த மாடலின் உட்புறத்தில் சிவப்புநிற தையல் கொண்ட டக்ஸெடோ பிளாக் அப்ஹோல்ஸ்டரி, சாங்ரியா சிவப்புநிற தீம் கொண்ட ஏசி வெண்ட்ஸ், முற்றிலும் கருப்பு நிறத்தாலான ஃப்ளோர் கன்சோல், ஸ்டீயரிங் வீல் மற்றும் சிவப்புநிற தையல்களுடன் கூடிய டோர்கள் உள்ளன. ஆஸ்டர் பிளாக்ஸ்டார்ம் ஜேபிஎல் ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த ஸ்பீக்கர்களை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட எம்ஜி டீலர்ஷிப்புகளிலும் பொருத்திக்கொள்ளலாம்.
அறிமுக விழாவில் பேசிய எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கௌரவ் குப்தா கூறுகையில், வாடிக்கையாளர்கள் ஆஸ்டரின் சமீபத்திய லிமிடெட் எடிஷனான – பிளாக்ஸ்டார்ம் மூலம் கூடுதல் சிறப்பான உணர்வை அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இது உறுதியான மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் பிரீமியம் தோற்றத்தைக் கொண்டுள்ளது என்றார். நிறுவனத்தின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவில் தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) உதவியாளரைக் கொண்ட முதல் கார் ஆஸ்டர் ஆகும்.

படிக்க வேண்டும்

spot_img