இந்தியாவில் பாதுகாப்பான , அதிகபட்ச தர மதிப்பீடு வழங்கப்பட்ட, கிராஷ் பரிசோதிக்கப்பட்ட வாகனங்களை தயாரிக்கும், ஸ்கோடா ஆட்டோ இந் தியா நிறுவனம், குஷாக் ஓனிக் ஸ்ப்ளஸ், ஸ்லேவியா ஆம்பிஷன் ப்ளஸ் ஆகிய இருவேரியண்ட்களை அறி முகப்படுத்தி உள்ளது.
இரண்டுமே, குறுகிய காலத்துக்குப், பண்டிகைக்கான விலையில், புதிய எக்ஸ்சேஞ்ச் பலன்கள் மற்றும் சிறப்பு கார்பொரேட் திட்டங்களுடன் வந்துள்ளன.
குஷாக் ஓனிக்ஸ் ப்ளஸ்ஸில், புத்தம் புதிய ஆர்16 க்ரஸ் அல்லாய் மற்றும் விண்டோக் ரோம் கார்னிஷ் பொருத்தப்பட்டுள்ளன.
முன்பக்க க்ரில்ரிப்ஸ் மற்றும் பின்பக்க ட்ரங்க் கார்னிஷ் ஆகியவை இப்போது முழுவதும் க்ரோமில் வருகிறது. ஓனிக்ஸ் ப்ளஸ் 1.0 டிஎஸ்ஐ ஆற்றல் கொண்ட எஞ்சின் மேனுவல் டிரன்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
குஷாக் ஓனிக்ஸ் ப்ளஸ் விலை ரூ 11.59 லட்சம். பிரத்யேகமாக கேண்டி வொயிட், கார்பன் ஸ்டீல் வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும்.
ஸ்லேவியா ஆம்பிஷன் ப்ளஸிலும், பிரத்யேக 1.0 டிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
பண்டிகைக்கால சிறப்பு சலுகையாக ஸ்லேவியா ஆம்பிஷன் ப்ளஸ்ரூ 12.49 லட்சங்களுக்கு கிடைக்கும். எம்க்யூபி-ஏக்யூ-ஐ இன் தளத்தில், உலகுக்காக இந்தியவில் தயாரி, என்னும் கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட, குஷாக் மற்றும் ஸ்லேவியா ஆகியவை நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
ஜிஎன்சி ஏபி புதிய மற்றும் கடுமையான பரிசோதனை தரக் கட்டுப்பாடுகளின் கீழ் இந்த சாதனையை படைத்த இந்தியாவில் தயாரி தளம் இது மட்டுமே.