fbpx
Homeபிற செய்திகள்கோவை: தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம்

கோவை: தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம்

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், பீளமேடு, பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கோவை மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கிழக்கு மண்டலத்தில் பணியாற்றும் 1000 தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனையை பார்வையிட்டார்கள்.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன், பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி இயக்குநர் புவனேஸ்வரன், சுப்பராவ், பொது மேலாளர் லோகநாதன், நகர்நல அலுவலர் தாமோதரன், உதவி நகர்நல அலுவலர் வசந்த்திவாகர், உதவி ஆணையர்கள் நூர் அகமது, செந்தில்குமார், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் அரவிந்த், ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பி.எஸ்.ஜி. மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img