விலைவாசி உயர்வு வேலை யின்மை உள்ளிட்ட பல்வேறு குறைகளை முன்னிறுத்தி பாஜக அரசை ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அனைத்து பொருட்களின் விலை உயர்வு, அரிசி, எண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஜி எஸ் டி வரி, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி, பண மதிப்பிழப்பு, ரயில்வே உள்ளிட்ட பொது நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பாதது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமி ழர்கள் காட்டும் ஆர்வத்தை, ஆணவம் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியது, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் பேசியிருப்பது, மணிப்பூர் கலவரம், பொது நிறுவனங்களை தனியார் மய மாக்குதல் என பல்வேறு விஷயங்களை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டா யமாக கைது செய்தனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஆறுமுகம் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சில தொழில்துறை அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட னர்.