Homeபிற செய்திகள்நகர்ப்புற சுகாதார நல மைய கட்டுமானப்பணியினை கோவை மேயர் ஆய்வு

நகர்ப்புற சுகாதார நல மைய கட்டுமானப்பணியினை கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளப்பட்டி சாலையில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டத்தின்கீழ், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார நல மைய கட்டுமானப்பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் குமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img