fbpx
Homeபிற செய்திகள்காரமடை: ரூ.40 லட்சத்தில் புதிய தார்சாலையை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்

காரமடை: ரூ.40 லட்சத்தில் புதிய தார்சாலையை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்

வீட்டு வசதித்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்ச ருமான முத்துசாமி நேற்று கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த வகையில் நேற்று மாலை காரமடை நகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டு பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 15 வது நிதிக்குழு மானியம் மூலம் புதியதாக போடப்பட்ட தார் சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் முத்துசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

அப்போது,கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, காரமடை நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ்,காரமடை நகராட்சி ஆணையர் பால்ராஜ்,கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு,திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக காரமடை வந்த அமைச்சருக்கு திமுக காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் பட்டாசுகளை வெடித்தும்,சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img