கோவை நீலாம்பூர் பகுதியில் அமைந்து உள்ள நட்சத்திர ஹோட் டலில் எல்.ஜி.எம் திரைப்பட குழுவினர் செய்தியாளர் களை சந்தித்தனர். இந்த படத்தில் நடித்த நடிகைகள் நதியா, இவானா மற்றும் நடிகர் ஹரிஸ் கல்யாண் ஆகியோர் செய்தியா ளர்களை சந்தித்து பேசினர்.
இந்த திரைப்படம் கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாகவும், தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட படமாகவும் வெளியாக உள்ளது.
முதலாவதாக நடிகர் ஹரிஸ் கல்யாண் நிருபர்களி டம் கூறியதாவது: –
கோவை வந்தது எனக்கு சந்தோஷம். இயக்குநரால் இங்கு வர முடியவில்லை, படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. தோனி ஒவ்வொரிடமும் படத்தை பார்த்துவிட்டு தனியாக பேசினார். தனது குடும்பத்துடன் படத்தை பார்த்து ரசித்தார்.
மேலும் தோனியின் முதல் படத்தில் நடித்திருப் பது எனக்கு மகிழ்ச்சி. அனைத்து தரப்பு மக்களும் பார்க்கக்கூடிய வகையில் ஒரு படமாக இது வந்துள் ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதனைத்தொடர்ந்து நடிகை நதியா நிருபர்க ளுக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்ப தாவது:- மணிப்பூர் சம்பவம் தொடர்பாக எது பண்ணினாலும் முன்பா கவே யோசிக்க வேண்டும்.
அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். இதே நிகழ்வு நமக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்று நாம் யோசிக்க வேண்டும்.
இந்த படத்தில் ஹரிஷின் அம்மாவாக நடித்துள்ளேன். படம் முழுவதும் ஃபன் ஆக எடுக் கப்பட்டுள்ளது. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் அம்மாவை அதாவது என்னை தனியாக காட்டினார்கள். அதேபோல் எனக்கு தகுந்த கதை வந்தால் நிச்சயமாக நடிப்பேன். தெலுங்கில் அதிக படங்கள் வந்தது. ஆனால் எனக்கு ஸ்கிரிப்ட் தான் முக்கியம்.
தோனி படம் எடுக்கி றார் என்று கேள்விப்பட்ட போது நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த பட குழுவினருடன் என்னை பார்க்கும் போது பாட்டி போன்று பீல் ஆகிறது. ஆம் சீனியர் நடிகையாக இருப்பதால் அப்படி உணர்கிறேன். சென் னைக்கும் தோனிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.
அதனால் தான் தமிழில் படத்தை தயாரித்துள்ளார். சப் டைட்டிலுடன் தான் தோனி படத்தை பார்த்தார். இந்த படமானது தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் திரையிடப்படுகிறது.
எனக்கு ஆக்ஷன் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. ஆனால் அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன்.
எப்பொழுதும் இளமையாக இருக்க உங்க அன்பு தான் காரணம். எல்லாம் சாப்பிட வேண்டும், முதல் மாடியாக இருந்தாலும் நடந்தே செல்லுங்கள். கமல் சார் உடன் படம் நடிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நடிகை இவானா பேசும் போது, தெலுங்கில் ஒரு படம் நடிக்க உள்ளேன். இன்ஸ்டாவில் என்னுடைய வாவ் என்ற ரீல் வைரல் ஆகி உள்ளது எனக்கு தெரியும். பூவே பூச்சூடவா படத்தை நான் இரண்டு முறை பார்த்துவிட்டு தான் நதியா மேடமை பார்க்க சென்றேன்.
படம் சூட்டிங் போது என்னை அனைவரும் கலாய்ப்பார்கள், அதற்கு அப்ப அப்ப நதியா மேம் கவுண்ட்டர் ஒன்னு கொடுப்பாங்க. நான் அதை கூறியவுடன் எல்லாரும் அமைதியாக மாறிடுவாங்க.
எல்ஜிஎம் படம் நன்றாக வந்துள்ளது. எல்லாருக்கும் இந்த படம் பிடிக்கும் அளவிற்கு இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.