கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி தின விழாவில் சீஸ்கேப் (Shescape), IQAC செய்திமடல் மற்றும் அனைத்து மையங்கள் மற்றும் கிளஸ்டர் துறைகளின் செய்திமடல்கள் வெளியிடப்பட்டன.
கோவை அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் கல்லூரி தின விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. முன்னதாக, கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, கல்லூரியின் ஆண்டறிக்கையைக் கல்லூரி யின் முதல்வர் டாக்டர் P.மீனா சமர்பித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழ கத்தின் துணை வேந்தர் முனைவர் கீதா லட்சுமி கலந்து கொண்டு கே.சி.டபிள்யூ கல்லூரியின் சீஸ்கேப் (Shescape), IQAC செய்தி மடல் மற்றும் அனைத்து மையங்கள் மற்றும் கிளஸ்டர் துறை களின் செய்தி மடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தற்போது இந்திய பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதாக கூறினார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, தொழில் முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த மூன்று நிலைகளிலும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா வேகமாக முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவித்தார். விவசாய துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக கூறிய அவர், இதில் புதுமையான முறைகளில் முயற்சி செய்வோர் சாதனையாளர்களாக மாறியுள்ளதை மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் கே.சி.டபிள்யூ கல்லூரி யில் பயின்ற 56 மாணவிகள் கல்வித் திறன் மற்றும் இணைப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இதே போல கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் 2023 – 2024 ஆம் ஆண்டில் இறுதியாண்டு சிறந்த மாணவி, மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளும் சிறந்த துறை விருதுகளும் வழங்கப்பட்டன.
மேலும் புரோபெல் இண்டஸ்ட் ரிஸ் நிறுவனம் சார்பாக இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக,.மாணவர் மன்றத்தின் தலைவர் ஆர்த்தி நன்றியுரை வழங்கினார்.