fbpx
Homeபிற செய்திகள்கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நடத்திய புற்றுநோய் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நடத்திய புற்றுநோய் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு

கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை துறையின் சார்பில் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களும் தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவை அவினாசி ரோட்டில் உள்ள லீமெரிடியன் ஹோட்டலில் நடை பெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட புற்றுநோய் நிபுணர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சியில் கடந்த வருடத்தின் அதிநவீன முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கருத்தரங்கின் போது கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவம் குறித்த இணை நிகழ்வும் நடைபெற்றது.

இதில் அதிகரித்து வரும் குடல் புற்றுநோய் இதன் மையக் கருத்தாக அமைந்திருந்தது. மார்ச் 31-ம் தேதி குழந்தைகள் புற்றுநோய் குறித்த ஒரு பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கேஎம்சிஹெச் குழந்தைகள் புற்று நோய் மருத்துவர் டாக்டர் ருமேஷ் சந்தர் வழி நடத்தினார்.

செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி அனைவரையும் வரவேற்றார். இதில் கேஎம்சி ஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி புற்றுநோய் மையம் எடுத்துவரும் முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img