கே.பி.ஆர். கலை அறி வியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, வணிகவியல் துறை இந்திய அரசு சென்னை, MSME-TDC (CFTI) இணைந்து ‘இன்றைய மாறிவரும் பொருளாதார நிலையில் தொழில் முனைவோரின் பங்கு’ என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கை நடத்தியது.
இரண்டாம் நாள் நிகழ்வு, கோவை, நேரு கல்விக் குழுமம் இன் குபேஷன் மையம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி.கீதா தலைமை தாங்கி பேசினார்.
வணிகவியல் துறை த்தலைவர் முனைவர் ஏ.சாந்தி வரவேற்றார்.
பல்வேறு கல்லூரி களைச் சேர்ந்த 100 மாண வர்கள் நேரு கல்விக் குழுமம் இன்குபேஷன் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேரு கல்விக் குழுமம் இன்குபே ஷன் மையம் செயலக இயக்குநர் முனைவர் பி.வைகுந்த செல்வன் பேசும் போது,தொழில் முனைவு குறித்த பல்வேறு புதிய திட்டங்களை விளக்கினார். மாறிவரும் உலகினிற்கு ஏற்ப பொருள் உற்பத்தி, வரவு, செலவு மற்றும் மனித உறவு மேம்பாடு பற்றியும் எடுத்துரைத்தார். தொழில் நுட்ப ரீதியிலான இணையவழி தொழில் முனைவு குறித்த புது மைச் செய்திகள் பற்றி விளக்கினார்.
வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஆர்.பிரேமா கருத்தரங்க அறிக்கை வழங்கினார். நடைபெற்ற நான்கு தொழில் நுட்ப அமர்வில் சிறந்த ஆய்வுத்தாள் வழங் கிய கோவை ரத்தினம் காலேஜ் ஆஃப் லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அண்டு டிப்ஸ் குளோபல், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி, கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
வணிகவியல் துறை புல முதன்மையர் முனைவர் கே.குமுதாதேவி நன்றி கூறினார். வணிகவியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் 52 கல்லூரிகளிலிருந்து 900 மாணவர்கள் பயனடைந் தனர்.