பெற்றோர்களைப் புரிந்து நடந்து கொள் பவர்கள் பெண் பிள்ளை களா? அல்லது ஆண் பிள்ளைகளா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றத்தை சிமாட்ஸ் தமிழ் மன்றம் நடத்தியது.
ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி, மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை சிறக்கச் செய்யும் சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சிமாட்ஸ் தமிழ் மன்றம் பட்டிமன்றத்தை நடத்தி வருகிறது.
‘பெண் பிள்ளை களே’ என்ற தலைப்பில் மாண விகள் மீனலோஷினி கோபாலகிருஷ்ணன் (சவீதா பார்மஸி கல் லூரி), செ.கிருத்திகா (சவீதா நர்சிங் கல்லூரி), கி.ஸ்ரீஆதிரை (சவீதா ஆக்குபேஷனல் கல்லூரி) ஆகியோரும், ‘ஆண் பிள்ளைகளே’ என்ற தலைப்பில் மாண வர்கள் இரா.ஜீவா (சிமாட்ஸ் இன்ஜினியரிங்
கல்லூரி), ரிஷி மகேஷ் குமார் (சவீதா கலை அறிவியல் கல்லூரி), நி.திருமூர்த்தி (சவீதா மேனேஜ்மென்ட் கல்லூரி) ஆகியோரும் பேசினர்.
பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகள் இருவருமே பொறுப்பானவர்கள்தான் என்று நடுவர் தீர்ப்பளித்தார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்த பேச்சாளருக்கான பரிசை கிருத்திகா பெற்றார்.
மாணவர்களின் மேடைப் பேச்சாற்றலையும், சொல்லாற்றலையும் வளர்ப்பதே சிமாட்ஸ் பட்டிமன்றத்தின் நோக்க மாகும்.