கோவை ஆர்.எஸ்.புரத்தில் பெண்களுக்காக கோஸ்கி (KOSKI) வழங்கும் “சூப்பர் வுமன்” தீம் பெண்களுக்கான மிகப்பெரிய வாக்-இன் ஷோ, ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது
கோவை ஆர் எஸ் புரம் டிபி ரோடு சந்திப்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணி வகுப்புக்கு பிரபல ஆடை வடிவமைப்பாளர் கருண் ராமன் தலைமை தாங்கினார்.
மருத்துவர், சமையல் கலைஞர், சமூக ஆர்வலர், போட்டோகிராபர், ஆடை வடிவமைப்பாளர் என பல்வேறு துறையைச் சார்ந்த பத்து பெண்கள் நவீன உடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
ஒவ்வொரு விழாக்காலத்தையும் சிறப்புமிக்கதாக மறக்கமுடியாததாக மாற்றும் நோக்குடன் செயல்பட்டுவரும் கோஸ்கி, கோவை ஆர்எஸ்புரத்தில் 7000 சதுர அடி பரப்பள வில் பிரத்யேகமான மணப்பெண் மற்றும் விழா ஆடைகள் விற்பனையகத் தை துவக்கி உள்ளது.
யுனிக் ரீடைல்
இது குறித்து எஸ்.பி.இ. யுனிக் ரீடைல் நிறுவனத்தின் நிர்வாகிகள் பிரதீப், .பாலு கணேஷ். ஆகியோர் தெரிவித்ததாவது: மணப்பெண்ணுக்கான ஆடைகள் முதல் திரும ணத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்குமான ஆடைகள் வரை அனைத் தும் எங்களிடம் உள்ளன.
நிச்சயதார்த்த ரேக்குகள், ஹல்தி, சங்கீத் உடைகள் மற்றும் அனைத்து வகை உடைகளும் இங்கு கிடைக்கும். இந்த ஃபேஷன் வாக்கின் நோக்கம் எளிமையானது.
ஃபேஷன் மூலம் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த விரும்பும் எவருக்கும் அணுகக்கூடிய மலிவு விலையில் ஆனால் ஆடம்பரமான தோற்றதை உரு வாக்கக்கூடியது என்றார்.