கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் திறப்பு விழா, டாக்டர் பிரசாந்த் ஐபிஎஸ்க்கு பாராட்டு விழா இன்று (19-ந் தேதி)ந டைபெற்றது
விழாவிற்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குனருமான டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமை தாங்கிப் பேசினார்.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் வி.சங்கீதா வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு அழைப் பாளராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப்பை திறந்து வைத்து ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் பிரசாந்தைப் பாராட்டி விருது வழங்கி பேசினார்.
அவர் கூறியதாவது:- உறுதி விடாமுயற்சி கடும் உழைப்பு மூன்றும் இருந்தால் சிவில் சர்வீஸ் துறையில் வெற்றி நிச்சயம். அது மட்டுமல்ல எந்த துறையை தேர்வு செய்தாலும் வெற்றி பெற முடியும். ஒரு மனிதனுக்கு முடிவு எடுக்கும் ஒரு திறனை ஆண்டவன் நமக்கு கொடுத்துள்ளார்.
அந்த முடிவை எடுப்பது உங்களுக்கு கையில் உள்ளது. கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் உங்களுக்கு சரியான பிளாட்பாரம் ஆகும். இதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிவில் சர்வீஸ் துறையில் மட்டும்தான் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் மற்ற துறைகளில் அது மிகவும் குறைவு மேற்கண்டவாறு மாநகர போலீஸ் கமிஷனர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
விழாவில் கல்லூரியின் முதல்வர் வி. சங்கீதா, ஒருங்கிணைப்பாளர்கள் டாக் டர் பி.சுஜாதா, டாக்டர் ஆர்.சுமதி, டாக்டர் ஆர். சரவணன்மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.