கோவை காளப்பட்டி சாலைN.G.P. கல்லூரி அருகே உள்ள கெட்டிமேளம் மகாலில் திமுக மாணவரணி சார்பாக கோவை மண்டல மாவட்டங்களான (கோவை தெற்கு, வடக்கு, மாநகர், கரூர், திருப்பூர் வடக்கு, தெற்கு, ஈரோடு வடக்கு, தெற்கு) மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் மாணவரணி செயலாளர் சிவிஎம்பி.எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.
மாணவரணி வழிகாட்டுதல்
இதனை மாணவரணி வழிகாட்டுதல் பொறுப்பாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, மின்சாரம்,மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தனர்.
இந்நேர்காணலில் மாணவரணி தலைவர் இரா.ராஜீவ் காந்தி, இணை-துணை செயலாளர்கள் சி.ஜெரால்டு எஸ் மோகன், மன்னை த.சோழராஜன் சேலம் ரா.தமிழரசன்.
அதலை.பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், பொன்ராஜ், விஜி கோகுல், பூரண சங்கீதா, வீரமணி மற்றும் மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் தோ.அ ரவி, தளபதிமுருகேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



