கோவை உப்பிலிபாளை யம் அடுத்த ஆடீஸ் வீதி பகுதியில், உள்ள பத்திரிக்கை யாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெம் மருத்துவம னை இயக்குநர் மருத்துவர் பழனிவேலு கூறியதாவது:
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், ஜெம் பவுண்டேஷன், மற்றும், கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் எனும் ஓட்ட போட்டி நடத்த திட்டமிடபட்டுள்ளது, இந்த மாரத்தான் போட்டி யானது, முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும், வகையில் நடைபெற உள்ளது.
இதில், சுமார், 10 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் வகையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற உள்ளது, இந்த போட்டியானது இரவு மாரத்தான் ஓட்ட பந்தயமாக நடைபெற உள்ளது, வ.உ.சி பூங்கா பகுதியில், பிப்ரவரி மாதம், 25ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த போட்டி இரவு 12 மணி வரை நடைபெறும்.
தொடர்ச்சியாக 5 மணி நேரம் இடைவிடாது நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் அனைத்து பெண்களும், கலந்து கொண்டு, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.