fbpx
Homeபிற செய்திகள்பஸ்சில் பெண் தவறவிட்ட கைப்பையை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு

பஸ்சில் பெண் தவறவிட்ட கைப்பையை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு

கோவையில் இருந்து திருப்பூர் வரும் அரசு பேருந்தில் கருமத்தம்பட்டியில் இருந்து திருப்பூர் பயணம் செய்த பெண் ரத்தினா என்பவர் தான் கையில் வைத்து இருந்த கைப்பையை தவறவிட்டார்.

அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் ரத்தினா புகார் அளித்தார். அப்பொழுது பணியில் இருந்த வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், முதல் நிலை காவலர் அஜித் குமார் ஆகியோர் ரத்தினாவிடம் பயணம் செய்த பேருந்தின் அடையாளம் கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அந்த குறிப்பிட்ட பேருந்து மீண்டும் கோவையை நோக்கி சென்ற தகவல் அறிந்து பின் தொடர்ந்து சென்று பெருமாநல்லூர் சாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ரத்தினாவின் கைப்பை கிடைத்தது.

கைப்பையை மீட்ட காவலர்கள் ரத்தினாவை வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து தக்க அறிவுரை கூறி மீட்கபட்ட கைப்பையை ஒப்படைத்தனர். மேலும் அந்தப் பெண் தவறவிட்ட கைப்பையில் 20 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

பெண் தவறவிட்ட கைப்பையை மீட்டு அதில் இருந்த தொகையுடன் ஒப்படைத்த காவலர்களை கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அணில் குமார் பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img