சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை காளப்பட்டி அருகே உள்ள, கைக்கோளபாளையம், பாரதி விளையாட்டுக் குழுவின், 36 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கபாடி போட்டி, இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இதில் பி.என்.புதூர் இளஞ்சிங்கங்கள் அணி முதலிடத்தையும், குறிச்சி லைஃப் ஸ்போர்ட்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், என்ஜிபி கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும், கேபிஆர் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
முன்னதாக இறுதிச் சுற்று ஆட்டங்களை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி.அருண்குமார், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர் கவிதா சண்முகசுந்தரம், கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், குறிஞ்சி மலர் பழனிச்சாமி, வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.ஆர்.ராஜன், பச்சாபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாரதி விளையாட்டுக் குழு தலைவர் ஆர்.சண்முகம், செயலாளர் கே.முருகேசன், பொருளாளர் ஜி.இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.



