fbpx
Homeபிற செய்திகள்‘அன்புக் கரங்கள் திட்டம்’ மூலம் 2.82 லட்சம் குழந்தைகள் பயன்பெற விண்ணப்பம்: அமைச்சர் கீதா ஜீவன்...

‘அன்புக் கரங்கள் திட்டம்’ மூலம் 2.82 லட்சம் குழந்தைகள் பயன்பெற விண்ணப்பம்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

பெற்றோர் இல்லாத குழந்தைகளின் கல்விச் செலவுக்காக மாத நிதி உதவி வழங்கும் ‘அன்புக் கரங்கள் திட்டம்’ மூலம் தமிழகத்தில் 2.82 லட்சம் குழந்தைகள் பயன்பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகளின் உடல் நலனைக் காக்கவும், தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாம் தொடக்க விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஆட்சியர் செ.சரவணன் தலைமை வகித்தார்.


அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் அமைச்சர் கீதா ஜீவன் முகாமைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது: “பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

பெற்றோர் இல்லாத குழந்தைகளின் கல்விச் செலவுக்காக மாத நிதி உதவி வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் செயல்படுத்த உள்ளார். இதில் 2.82 லட்சம் குழந்தைகளுக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. புதிய செயலி மூலம் குழந்தைகள் எடை, உயரம், தரவுகள் பதிவு செய்யப்படும்.


அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கையை ஏற்க மாட்டோம் எனக் கூறவில்லை. அதை அரசு பரிசீலனை செய்து வருகிறது. எப்போது நிறைவேற்றப்படும் என்பதை நான் சொல்ல முடியாது. காலம் வரும்போது கனியும். மாணவர்கள் பள்ளிகளுக்கு ருத்திராட்சம், திருநீர் உடன் வருவது அவரவர் விருப்பம். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img