இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற விளையாட்டு விழா வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. வெற்றி பெறும் அணிகள் ரூ.56 லட்சத்திற்கும் மேல் பரிசுத் தொகை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
ஈஷா கிரமோற்சவத்தின் 15-வது ஆண்டாக இந்த விளையாட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. தொழில்முறை விளையாட்டு வீரர்கள் இல்லாமல் முற்றிலும் கிராமப்புற வீரர்கள் மட்டுமே பங்கு பெறும் தனித்துவமான போட்டி இது.
ஈஷா கிரமோற்சவத்தின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் இந்திய பகுதிகளில் நடத்து வதால், கிராமப்புற இந்தியாவின் உணர்வை புதுப்பிக்க உறுதியளிக்கிறது.
25,000 கிராமங்களில் இருந்து 60,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கோவையில், 150 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குழுக்களை எதிர்பார்க்கிறோம்.
2,600 பேர் பங்கேற்க உள்ளனர். இதில், ஆடவர் கைப்பந்து 120 அணிகள், பெண் கள் த்ரோபால் 60, ஆண்கள் கபடி 60, பெண்கள் கபடி 15 அணிகள்.
கோவையில் கிளஸ்டர் அளவிலான போட்டிகள் தொண்டாமுத்தூர், சூலூர், காரமடை, பொள்ளாச்சியில் திட்டமிடப் பட்டுள்ளன.
ஆக. 12, 13 தேதிகளில் வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளும், ஆக.26, 27 தேதிகளில் கபடி போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெற்றிபெறும் அணிகள் தொடர்ந்து மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறும்.
112 அடி உயரமுள்ள ஆதியோகி சிலை முன்பு, ஈஷா மையத்தில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி இறுதிப்போட்டிகள் நடைபெறும். ஈஷா நிறுவனர் சத்குரு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெறும் அணிகள் கணிசமான வெகுமதிகளைப் பெற உள்ளன. வெல்லும் ஆண்கள் வாலிபால், பெண்கள் த்ரோபால் அணிக்கு ரூ. 5 லட்சம், பெண்கள் கபடி அணிக்கு ரூ.2 லட்சம், ஆண்கள் கபடி அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
ஈஷா கிராமோற்சவத்தின் கடந்த பதிப்புகளில் 8,412 அணிகள், 1,00,167 வீரர்கள் பங்கேற்றனர்.
பங்கேற்க விரும்பும் அணிகள் லீttஜீs://வீsலீணீ.நீஷீ/ரீக்ஷீணீனீஷீtsணீஸ்ணீனீ-tணீனீவீறீ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மேலும் தகவலுக்கு, 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்தார்.



