fbpx
Homeபிற செய்திகள்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள்- தி கேம்போர்ட் இன்டர்நேஷனல் பள்ளி சிறப்பிடம்

பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள்- தி கேம்போர்ட் இன்டர்நேஷனல் பள்ளி சிறப்பிடம்

பள்ளிகளுக்கு இடையிலான ‘தி கேம்ஃபோர்ட் கோல்டன் பூட் சாம்பியன்ஷிப்’ கால்பந்து போட்டி கள் பள்ளி வளாகத்தில் செயற்கை புல் தரை மைதானத்தில் இரண்டு நாட்கள் நடந்தன.

பள்ளித் தலைவர் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சியால் ஆகியோர் போட்டிகளைத் துவக்கி வைத்தனர்.

மாணவர்களுக்கு 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும், மாணவிகளுக்கு 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் நடந்த இப்போட்டியில் 22 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.

17 வயதுக்கு உட்பட்டோர் மாணவிகள் பிரிவில் தி கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி முதலிடமும், ஜிஆர்டி பப்ளிக் பள்ளி 2-வது இட மும் பெற்றன.
மாணவர்களுக்கான 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஜிஆர்டி பப்ளிக் பள்ளி முதல் பரிசையும், சுகுணா பிஐபி பள்ளி இரண்டாவது பரிசையும வென்றது.

மாணவர்களுக்கான 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சுகுணா பிஐபி பள்ளி முதலிடத்தையும், தி கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. பள்ளி நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img