fbpx
Homeபிற செய்திகள்சவீதா பல் மருத்துவக் கல்லூரி சார்பில் ‘வாய் சுகாதார தின’ நிகழ்ச்சி

சவீதா பல் மருத்துவக் கல்லூரி சார்பில் ‘வாய் சுகாதார தின’ நிகழ்ச்சி

சென்னையில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் இந்திய பல் மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து ‘வாய் சுகாதார தினம் 2023’ஐ சிறப்பாக கொண்டாடின.

ஆண்டுதோறும் வாய் சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த தினம் ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்மருத்துவராக’ இருங்கள் என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட்டது.

இதன் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் டூத் பிரஷ்களில் இருந்து மூங்கில் டூத் பிரஷ்சுக்கு மாறுவதை இது வலியுறுத்துகிறது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இம்மருத்துவக் கல்லூரிக்கு வந்த நோயாளிகளிடம் வாய்வழி சுகாதாரம் குறித்து மாணவர்கள் விளக்கமாக எடுத்துக்கூறி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மூங்கில் பிரஷ், பேஸ்ட் உள்ளிட்ட பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான பல்வேறு தகவல்களைக் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. அவர்கள் வாயை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்தும் தெளிவாக கூறப்பட்டது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியும் ‘புதுமையான பசுமை யோசனைகள்’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளும் மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவர்கள் பிளாஸ்டிக் பிரஷ் பயன்பாட்டிற்கு மாற்றாக பல்வேறு யோசனைகளை முன்வைத்தார்கள்.

மாணவர்களால் எடுத்துக்கூறப்பட்ட செய்திகளை சமூக வலைதளங்களில் பரவலாக்க இன்ஸ்டாகிராம் ரீல் போட்டியும் நடத்தப்பட்டது.

நாளைய பசுமையான இந்தியாவை உருவாக்க இந்த பசுமை இயக்க நிகழ்ச்சிகளை இக்கல்லூரி வரும் 15-ம் தேதி வரை நடத்துகிறது.

படிக்க வேண்டும்

spot_img