fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளைகள் திறப்பு விழா

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளைகள் திறப்பு விழா

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா நேற்று காயல்பட்டினம் மற்றும் கம்மம் பகுதிக ளில் நடைபெற்றது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி, பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

வங்கியானது 542 மற்றும் 543வது கிளைகளை கம்மம் (தெலுங்கானா மாநிலம்) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் ATM/CRM வசதியுடன் நேற்று துவக்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலம்- கம்மம் 542வது கிளையை தொழில் வர்த்தக சபை தலைவர் சின்னி கிருஷ்ண ராவ் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 543வது கிளையை ஐக்கிய முஸ்லிம் பேரவை தலைவர் முகைதீன் தம்பி (எ) துரை திறந்து வைத்தார். விழாவில், வங்கி யின் ஊழியர்கள், அலுவலர் கள், வாடிக் கையாளர்கள் மற்றும் பொதுமக் கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கூறியதாவது: பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று 541, 542 வது புதிய கிளைகளை கம்மம் தெலுங்கானா மாநிலம் மற்றும் காயல்பட்டினம், தூத்துக்குடிமாவட்டம் ஆகிய இடங்களில் துவக்கியுள்ளது.

மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளைகளின் துவக்க விழா வின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகி றேன்.

வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட், ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வரு கிறது.

இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 543 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவகங்களை கொண்டு சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img