fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாட்டில் 3000 கி.மீ., தூரத்திற்கு எரிவாயு குழாய்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இயக்குனர் பேட்டி

தமிழ்நாட்டில் 3000 கி.மீ., தூரத்திற்கு எரிவாயு குழாய்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இயக்குனர் பேட்டி

தமிழ்நாட்டில் 3000 கி.மீ., தூரத்திற்கு இயற்கை எரி வாயு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் 1.5 கோடி இணைப்புகள் வழங்கப்படும்,” என, கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் பதிப்பு பிரிவு இயக்குனர் எஸ்.நானேவரே தெரிவித்தார்.

கோவை வெள்ளானைப்பட்டியில் ஏர்வியோ தொழில்நுட்பத்தின் சார்பில், இயற்கை எரிவாயு சிலிண்டர் அழுத்த நிலை பரிசோதனை யுனிட் அமைக்கப்பட்டுள்ளது.

இதை பார்வையிட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் பதிப்பு பிரிவு இயக்குனர் எஸ்.நானேவரே கூறியதாவது: கோவையில் அமைக்கப்பட்டுள்ள ஏர்வியோ எரிவாயு சிலிண்டர் பரிசோதனை நிலையம், ஏர்வியோ டெக்னாலஜிஸ் பங்குதாரர்கள் கே.பார்த்தசாரதி, எஸ், பிரதிப், பி.சரவணக்குமார், ஆர்.ஜெயபிரகாஷ் ஆகியோரின் முயற்சியில் தமிழ்நாட்டில் முதலாவது மற்றும் மிகப்பெரியதும் ஆகும். கார், பஸ், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன் படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.

இயற்கை எரிவாயு மிக அழுத்தமான முறையில் சிலிண்டர்களில் 250 பார் அளவு வரை அழுத்தம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் அனுமதியுடன் இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டினை வரும் 2070ம் ஆண்டுக்குள் முற்றிலும் நிறுத்த வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.

வரும் 2030ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5 சதம் முதல் 15 சதம் வரையில் இயற்கை எரிவாயு பயன்பாட்டினை ஏற்படுத்தப் படும். 98 சதம் மக்கள் இயற்கை எரி வாயுவை பயன்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அனைத்து மாநி லங்களிலும் எரிவாயு பைப்லைன்கள் பதிக்கப்படும். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநி லங்களில் பைப்லைன்களை பதிப் பதில் சிக்கல்கள் உள்ளன. இவை மலைப்பிரதேசங்களாகவும் உள்ளன.

பெட்ரோலியம் திரவ எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி சார்ந்தது. ஆனால், இயற்கை எரிவாயு இந்தியாவிலேயே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை எரிவாயுவை பைப்லைன்கள் வழியாக கொண்டு செல்வது எளிது.

குழாய் அமைக்கும் பணி

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கடந்த 2019ம் ஆண்டு முதல் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. 3000 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்படும்.

300 இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். பெட் ரோலியம் எரிவாயுவை காட்டிலும், இயற்கை எரிவாயு பாதுகாப்பானது; காற்றை விட லேசானது. எல்பிஜி வாயுவை விட 30 சதவீதம் விலை குறைவானது.
கோவையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி வேகமாக நடக்கிறது.

தொழிற்சாலைகள், விடுதிகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட் டமிட்டுள்ளோம். இப்பணி 2027ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்.

சர்வதேச அளவில் உள்ள பொருளாதார நிலை சீரடையும் போதும், உக்ரைன் போர் முடிவுக்கு வந்த பின்னும் சுழ்நிலைகள் மாற்றத் துக்கு ஏற்ப எரிவாயு விலை குறைய வாய்ப்புகள் உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் விலையில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img