இந்தியாவின் முன்னணி ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான லைஃப்ஸ்டைல், தனது 100-வது ஸ்டோரை ராய்ப்பூரில் திறந்துள்ளது.
கடந்த 23 ஆண்டுகளாக இந்திய சில்லறை விற்பனை வர்த்தகத்தில் ஃபேஷன் வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக லைஃப்ஸ்டைல் உள்ளது.
லைஃப் ஸ்டைல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தேவராஜன் ஐயர் கூறியதாவது:
ஒரு ஸ்டோரின் எளிமையான தொடக்கத்திலிருந்து 100 ஸ்டோர்கள் என்ற முக்கியமான மைல்கல் வரை லைஃப்ஸ்டைலின் பயணம், எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஃபேஷனில் சில்லறை விற்பனை அனுபவத்தை மறுவரையறை செய்வதற்கு எங்கள் உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.
ராய்ப்பூரில், வளர்ந்து வரும் சில்லறை சந்தை மற்றும் நவநாகரீக மற்றும் நாகரீகமான தயாரிப்புகளுக்கான அதிக தேவையால், லைஃப்ஸ்டைல் ஸ்டோர் திறக்கப்பட்டது. மேக்னெட்டோ மாலில் அமைந்துள்ள இந்த ஸ்டோரானது, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள், எளிதாக அணுகக் கூடிய இடத்தில் அமைந்துள்ளது.
21000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஸ்டோரில் ஆடை, காலணி, ஹேண்ட்பேக், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் உள்ளன. ஸ்டைலின் அடையாளமாக திகழும் இந்த ஸ்டோர், ஒரு தெளிவான ஷாப்பிங் சூழலை உறுதிசெய்கிறது.
லைஃப்ஸ்டைலின் வலுவான போர்ட்ஃபோலியோவான மெலஞ்ச், கப்பா, கோட், ஃபோர்கா, ஜிஞ்சர், போஸ்ஸினி, ஃபேம் ஃபாரெவர் உட்பட தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் விரி வான தேர்வை சில்லறையில் விற்பனை செய்கிறது என்றார்.



