சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன் றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட் டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட் சியர் செ.கார்மேகம் செய் தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறிய தாவது:
முதல்வரின் அறிவுறுத் தலுக்கிணங்க, மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
ஆய்வு
அந்தவகையில், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், கொட்டஞ்சேடு முதல் -கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது.
2022-23-ம் நிதியாண் டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், பொது நிதியின் கீழ் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் 54 பணிகளும், 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் 123 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிகள் உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.69 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 5 பணிகளும் என 2022-23-ம் நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10.79 கோடி மதிப்பீட்டிலான 222 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்திடவும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார் ஆட்சியர்
ஏற்காடு வருவாய் வட்டாட்சியர் ம.தாமோதரன், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அன் புராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவிப் பொறியாளர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



