Homeபிற செய்திகள்இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் -“எல்சியா-2K24” என்ற தலைப்பில், கங்கா கலை அரங்கத்தில் நடைபெற்றது.

முனைவர் என்.பி. ஆனந்தமூர்த்தி ( மின் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்) வரவேற்புரை வழங்கி விழாவினை துவக்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.ஜெயா, வாழ்த்துரை வழங்கி பேசுகையில், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, தேசிய நிலைத் தன்மை தாக்க நிறுவனத்தின் தர வரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது:

நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் சமூக தாக்கத்திற்கான அர்ப்பணிப்பு வழிகளில் நமது கல்லூரி சார்பாக நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் 17 எஸ்டிஜி கோல்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை பூர்த்தி செய்வதாக கூறினார். மாணவர்கள் தங்களது திறமைகளை ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் காப்புரிமை பெறுவதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராக முனைவர். புத்திரபிர தாப்.டி (இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், முதன்மை விஞ்ஞானி, ஏஜி. விரிவாக்கம், கரும்பு ஆராய்ச்சி இதழ்- விரிவாக்கக் கல்வி இதழ், கரும்பு வளர்ப்பு நிறுவனம், கோவை) கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில் ”நீங்கள் வேகமாக செல்ல விரும்பினால் தனியாக செல்லுங்கள்….. நீங்கள் வெகுதூரம் செல்ல விரு ம்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்” என்று மாணவ, மாணவிகளுக்கு மேற்கோள் காட்டினார். மாணவர்கள் தங்களது கல்விப் பய ணத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை யுஜிசி கேர்ஸ் கோப்பஸ் போன்ற அங்கீ கரிக்கப்பட்ட நாளிதழ்களில் வெளியிடுமாறு கூறினார். மாணவர் தலைவர் தினேஷ்குமார் நன்றியுரை வழங்கினார்.

இந்த கருத்தரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுத் தொகையுடன் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செய லாளர் முனைவர் பிரியா சதீஸ்பிரபு, கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.ஜெயா, முதன்மை செயல் அதிகாரி முனைவர் கே.கருணாகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினார்கள். .

தொழில்நுட்ப கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு உள்ளடங்கிய மலரை சிறப்பு விருந்தினர் முனைவர். புத்திரபிரதாப் டி, வெளியிட்டார். மற்றும் பேராசிரியர் முனைவர் என்.பி.ஆனந்தமூர்த்தி, மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முனைவர் ஜெ.ஜெயா, கல்லூரி முதல்வர், முத்துராம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img