தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 18 ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தர்மபுரி மாவட்டத்தில் நடந்த இளையோர் கலை விழாவில் மாவட் டத்தில் முதலிடம் பிடித்து. மாநில அளவில் தகுதி பெற்றனர். பின்னர் சென்னை மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவில் நடைபெற்ற இளையோர் கலை விழாவில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
அதைத்தொடர்ந்து தேசிய அளவில் பங்குபெறும் ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் கவினா, சந்தியா, அனிதா, தீபா, கோபிகா, மணிகண்டன், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாணவ மாணவிகளை தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பிறகு கலைத்துறையில் மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் நீங்கள் படிக்கும் மருத்துவ படிப்பிலும் சிறந்த மாணவ மாணவிகளாக விளங்க வேண்டும். என்று வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறினார்.
இந்த நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். உடன் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அழகு மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட செவிலியர் அமைப்பு தலைவி ராஜேஸ்வரி அம்மையார், கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ்வரி, குமுதா, கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, சமூக ஆர்வலர் ராம் குமார், கல்லூரி நிர்வாக உதவியாளர் சுபாஷினி ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.