கோவையில் முதல் வாடிக்கையாளர் அனுபவ மையத்தை கிரெடாய் கோவை மண்டலத் தலைவர் குகன் இளங்கோ திறந்து வவத்தார். வீடுகளுக்கான லிப்ட் தயாரிப்பில் இந்தியாவில் முன் னணி நிறுவனமாகத் திக ழும் நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனம் கோவையில் தனது முதல் வாடிக்கையாளர்அனுபவ மையத்தைத் திறந்துள்ளது.
இந்தப் புதிய மையம் கேவிஎஸ் ஆர்கேட்,, சத்தி சாலை, கணபதி, கோவை என்ற முகவரியில் திறக்கப்பட்டுள்ளது. அனுபவ மையத்தை நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் கிரெடாய் கோவை மண்டலத் தலைவர் குகன் இளங்கோ திறந்து வைத்தார்.
ஐரோப்பிய தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள நிபாவ் லிப்ட், ஒவ்வொரு வாடிக்கையாளர் வீட்டிலும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல் படுவதாகும். சக்கர நாற்காலி அல்லது வாக்கிங் ஸ்டிக்கைப் பயன்படுத்தும் வீட்டு உரிமையாளர்களும் இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
மருத்துவ ஓய்வு, இயலாமை, மற்றும் படி ஏறும்போது மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த லிப்ட் பேருதவியாக இருக்கும்.
இந்த லிப்ட்கள் வழக்கமான ஹைட்ராலிக் லிப்ட்களை விடக் குறைந்த அளவிலான மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன. அத்துடன், இவற்றுக்கென்று பிரத்யேகமான கட்டுமானங்கள், கிரீஸ் போன்ற எதுவும் தேவை யில்லை.