கோவை ரெசிடென்சி ஹோட்டலில் அனைத்து மாநில கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடக்க விழா நேற்று (15ந்தேதி) நடை பெற்றது.
நாளை (17ஆம் தேதி) வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கோவை பெண் தொழிலதிபர்கள் சப்னா மகிஜா நாக்பால் நீத்து ராதா ஜாஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கோ கிளைம் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா, ராகுல் ஆகியோர் வரவேற்றனர்
இந்த கண்காட்சியில் அனைத்து மாநில கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் நகைகள் உள்பட பல்வேறு வகையான கைவினை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியை காண அனுமதி இலவசம். மேற்கண்ட தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் ஹீனா, ராகுல் ஆகியோர் தெரிவித்தனர்.