fbpx
Homeபிற செய்திகள்குன்னூர் அருகே எடப்பள்ளி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1,036 பேருக்கு ஏடிஎம்...

குன்னூர் அருகே எடப்பள்ளி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1,036 பேருக்கு ஏடிஎம் கார்டு

நீலகிரி மாவட்டம் குன் னூர் ஊராட்சி ஒன்றியம், எடப்பள்ளி ஊராட்சி, இளித்தொரை கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1,036 மகளிருக்கு ஏடிஎம் கார்டு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் மு.அருணா முன்னிலை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயர வேண்டு என்ற நோக்கத்தில் பல சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதில் ஒன்று தான் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இத் திட்டத்தின் மூலம் தமிழ கம் முழுவதும் சுமார் 1.06 கோடி மகளிர் பயன் பெறுவார்கள். பெண் கள் எந்த அளவுக்கு முன் னேறுகின்றனரோ அந்த அளவுக்கு சமுதாயம் நல்ல நிலையில் இருக்கும்.

இது ஒரு சமூக நீதி கொள்கை. ஆண்களுக்கு நிகராக பெண்கள் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சமுதாயத்தில் பெண்களுக்கு ஒரு சுய மரியாதை கிடைக்கும்.

இளித்தொரையில் நடைபெறும் விழா மூலம் அதிகரட்டி பேரூராட்சியில் 93 மகளிருக்கும், குன்னூரில் 289 மகளிருக்கும், பர் லியார் ஊராட்சியில் 67 மகளிருக்கும், உபதலை ஊராட்சியில் 172 மகளிருக்கும் என மொத்தம் 1,036 மகளிர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசி னார்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நட மாடும் ஏடிஎம் வாகனம் மூலம் மகளிர் எவ்வித சிரமமின்றி உடனடியாக கலைஞர் மகளிர் உரிமை தொகையை எடுத்துச் சென்றனர்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்த குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசி குமார் சக்கரபாணி, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷீலாகேத்ரின், ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனித்தாநேரு, வட்டாட்சியர் கனிசுந்தரம், எடப்பள்ளி ஊராட்சி தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனகுமாரமங்கலம் ஆறுமுகம், இளித்தொரை ஊர் தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img