கோவையில் அமைந்துள்ள அம்ரிதா விஸ்வ பீடத்தில் ஒன்றுபட்ட ஒரு உலகிற்கான தொழில்நுட்பம் மற்றும் பாது காப்பு மீது நடைபெறும் ஜி20 (ஜி20) உச்சி மாநாடு நடந்தது.
தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான ஜி20-ன் அதிகாரப்பூர்வ நடவடிக்கை குழுவால் நடத்தப் படும் இந்த இரு நாட்கள் மாநாட்டு நிகழ்வின் தொடக்கவிழாவில் இந்தியாவிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பல பிரபல வல்லுநர்கள் கலந்து கொண் டனர்.
தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என். ரவி மாநாட்டில் பேசி யதாவது:
ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியாவிற்கு, அதன் சிறப்பான பாரம்பரியத்தின் அடிப்படையில் கொள்கை பரிந்துரைகளை வழங்குவதற்கு இதுவொரு சிறப்பான வாய்ப்பாகும்.
அனைத்து படைப்புகளிலும் இறைவன் ஒருவனே இருப்ப தையும், படைத்தவனுக்கும், படைக்கப்பட்டவைக்கும் இடையே வேறுபாடு இல்லை என்பதையும் நமது முனிவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தனர்.
பன்முகத் தன்மையை அதே பொதுமை அம்சத்தின் மாறு பட்ட வடிவங்கள் என்று ஏற்றுக் கொள்வதை விட உலகின் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண அதிக சக்தி வாய்ந்த வழிமுறை ஏதும் இருக்க இயலாது.
இந்தியாவிற்கே உரிய இந்த தனித்துவமான அனுபவத்தையும் மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வையும் ஒட்டுமொத்த உலகின் அனைத்து மனிதர்களுக்கும் நாம் கொண்டுபோய் சேர்ப்பது அவ சியம்.
இன்றைக்கு இந்தியாவில் ஒரு பரிமாண நிலைமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. உலகமே நம்பிக்கையோடு நம்மை எதிர்நோக்குகிறது. ஜன் தன் யோஜனா டிஜிட்டல் இந்தியா, யிகிவி டிரினிட்டி மற்றும் யுபிஐ போன்ற முன் னெடுப்புகளின் வழியாக தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் நமது வெற்றிகள் சாத்திய மாக்கப்பட்டிருக்கின்றன.
சேவைகளை ஆன்லைனில் வழங்க உதவியதன் மூலம் இத்தகைய தொழில்நுட்பம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறை தாக் கத்தை உருவாக்கியிருக்கிறது. எண்ணற்ற நாடுகளை விட கோவிட் பெருந்தொற்றை மிகச்சிறப்பாக நாம் கடந்து செல்லவும் இதுவே உதவியது.
பரப்புரை
பல ஆண்டுகளாக தங்களது வீட்டு வாசலிலேயே 800 மில்லியன் நபர்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைப்பதையும் இதுதான் உறுதிசெய்கிறது. இன்றைக்கு நமது வளர்ச்சி மிகப்பெரியது. அரசின் ஒவ்வொரு திட்டமும், பிரமாண்டமான ஆதாய விளைவிற்கு வழிவகுக்கும் வகையில் மிகப்பெரிய பரப்புரை திட்டத்தில் மக்கள் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்படுகிறது.
பெண்களின் ஆற்றலைப் பயன்படுத்தாமல் எந்தவொரு நாடும் வளர்ச்சியை அடைய இயலாது. பல நூறாண் டுகளாக இந்தியாவில் மிகப் பெரிய அளவில் பாலின சம நிலையின்மை இருந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் செய்த முயற்சிகளினால் இது மாறியிருக்கிறது.
முதன்முறையாக ஆண்களை விட, அதிக பெண்கள் எண்ணிக்கை என்ற நிலை எட்டப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்தம் வெளிப்படுத்தியிருக்கிறது.
புதிய கண்டுபிடிப்புகளினால் தனித்துவமான, புதிய ஆபத்துகளும் உருவாகக்கூடும் என்பதால், எந்தவொரு புதிய கண்டுபிடிப்பு நிகழும்போது பொதுமக்கள் மத்தியில் அது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, அது ஏற்படுத்தும் எதிர் மறை தாக்கம் மீது விரிவான ஆராய்ச்சி செய்யப்படுவது அத் தியாவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
மாதா அமிர்தானந்தமயி மடத்தின் துணை தலைவர் மற்றும் சி20 முக்கூட்டு குழுவின் உறுப்பினர் சுவாமி அம்ரிதாஸ்வரூபானந்த பூரி, பேட்ரிக் ஜே.மெக்கவர்ன் ஃபவுண்டேஷனின் தலைவர் மற் றும் அறங்காவலர் விலாஸ் தார், இஸ்ரேலிய நிதியமைச்சகத்தின் ஆலோசகர் மற்றும் நிதிசார் சைபர் உத்தி நிபுணர் மிச்சா வெய்ஸ், பிரேசிலின் கல்வி பெறும் உரிமைக்கான தேசிய இயக்கத்தின் கொள்கை ஆலோசகர் மார் செலி ஃபிராஸார்டு, தென் னாப்பிரிக்காவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் மின்-ஆளுகை துறையின் தாக்க பாதிப்பு துறை மேலாளர் மேத்யூ செட்டி, இன்டல் கார்ப்பரேஷனின் இயக்குநர் மற்றும் சர்வதேச ஆலோசனை கவுன்சிலைச் சேர்ந்த அலிசன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்று உரை யாற்றினர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா கில்கேனி மற்றும் இந்தோனேஷியாவின் சி20 முக்கூட்டு குழு உறுப்பினர் ஆஹ் மஃபுதான் ஆகியோரும் மெய்நிகர் வழிமுறையில் நிகழ்வில் பங்கேற்றனர்.



