ஜி.கே.என்.எம்.மருத்துவமனை தனது 71-வது நிறுவனர் தினத்தை, அர்ப்பணித்த நிறு வனர்களை நினைவு கூரும் வகையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
கோவை மணி மேல்நிலைப் பள்ளியின் நானி பல்கிவாலா கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவில், ஜி.கே.என்.எம். மருத் துவமனையின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் ரகுபதி வேலு சாமி வரவேற்றார்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தன்னிகரில்லா சேவையினை பாராட்டும் வகையில், சிறப்பு மிக்க சேவை விருதுகள், செயல்திறன் சிறப்பு விருதுகள், மெரிட்டோரியஸ் சர்வீஸ் விரு துகள் வழங்கப்பட்டன.
குப்புசாமி நாயுடு கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பதி, துணைத் தலைவர் ஆர். கோபிநாத் ஆகியோரது முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக ZF gT யின் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கலந்து கொண் டார். மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோகரன் நன்றி கூறினார்.