fbpx
Homeபிற செய்திகள்மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சேலத்தில் கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சேலத்தில் கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இந்த பிரச்சினையில் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இரு சமூகங்கள் சார்ந்த தீவிரவாத குழுக்களும் தாக்குதல் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

50 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது.
இந்த கலவரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கு இயல்பு நிலை தொடர வேண்டும் மனிதநேயம் வளர வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்ட கிறிஸ்தவ சபைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பதாகைகள் ஏந்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img