மாணவர்களுடைய வாழ்க்கை திறனை மேம்படுத்துவதற்கான புதியன விரும்பி கோடை பயிற்சி முகாமிற்கு தமிழ் நாடு முழுவதிலிருந் தும் வந்த அரசுப் பள் ளியினை சேர்ந்த 1040 மாணவர்களுக்கு, கோவை மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பால் சுமார் ரூ.4.6 லட்சம் மதிப்புடைய காலணிகள்,Besten pumps co, Foxsense innovation co ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டது.
மாணவர்களுடைய வாழ்க்கை திறனை மேம் படுத்துவதற்கான புதியன விரும்பி கோடை பயிற்சி முகாமை இரண்டாவது ஆண்டாக ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் கடந்த 23-ம் தேதி தொடங்கி வைத்தனர்.
முகாமில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வந்த அரசுப்பள்ளியினை சேர்ந்த 1040 மாணவர் களுக்கு சுமார் ரூ.4.6 லட்சம் மதிப்புடைய காலணிகள் வழங்கப்பட்டன என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.



