fbpx
Homeபிற செய்திகள்மின்சார வாகன விற்பனையில் சாதனை படைத்த ‘எம்ஜி மோட்டார்’

மின்சார வாகன விற்பனையில் சாதனை படைத்த ‘எம்ஜி மோட்டார்’

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், உலகளவில் அதன் வெற்றிகரமான ZS EV – மின்சார வாகன விற்பனையில், இந்தியாவில் 10,000 என்ற அளவைக் கடந்திருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் பியூர் – எலக்ட்ரிக் இன்டர்நெட்
SUV என்று அழைக்கப்படும் எம்ஜி ZS EV, மிகப்பிரபலமான மின்சார வாகனம் என்ற நற்பெயரைப் பெற்றிருக்கிறது. இந்த ஆல் நியூZS EV, 2 வேரியண்ட்களில் (எக்ஸைட் & எக்ஸ்க்ளூசிவ்) முறையே ரூ. 23,38,000, ரூ.27,29,800 என்ற விலைகளில் கிடைக்கிறது.

மின்சார வாகனமான ZS EV சார்ஜிங் செய்வதற்கு 6 விருப்பத்தேர்வுகளுடன் வருகிறது: டிசி சூப்பர் – ஃபாஸ்ட் சார்ஜர்கள், ஏசி ஃபாஸ்ட் சார்ஜர்கள், எம்ஜி டீலர்ஷிப்களில் ஏசி ஃபாஸ்ட் சார்ஜர், ZS EV உடன் போர்ட்டபிள் சார்ஜர், மொபைல் சார்ஜிங் ஆதரவிற்கு ZS EV , 24X7 RSA, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பை வலுப்படுத்த 1000 நாட்களுக்குள் இந்தியாவெங்கிலும்
சமூக அமைவிடங்களுக்குள் 1000 ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் சாதனங்களை நிறுவுவதை இலக்காக கொண்டிருக்கும் எம்ஜி சார்ஜ் இனிஷியேட்டிவ்.

ZS EV வாகன உரிமையாளர்களது இல்லம் அல்லது அலுவலகத்தில் கட்டணமின்றி இலவசமாக ஒரு ஏசி ஃபாஸ்ட் சார்ஜரை எம்ஜி இந்தியா நிறுவி வழங்குகிறது.
ஆல் – நியூ ZS EV, இப்போது இப்பிரிவிலேயே மிகப்பெரிதான 50.3kWH என்ற மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட பேட்டரியுடன் கிடைக்கிறது.

8.5 நொடிகளுக்குள் மணிக்கு பூஜ்யத்திலிருந்து 100 கி.மீ. என்ற வேகத்தை எட்டுவதற்கு உதவுகின்ற இவ்வகையினத்தில் 176PS ஆற்றலை வழங்குகிற புதிய சக்தி வாய்ந்த மோட்டார் இடம்பெற்றிருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img