fbpx
Homeபிற செய்திகள்வளர்ச்சித்திட்டப் பணிகள்: கோவை ஆட்சியர் ஆய்வு

வளர்ச்சித்திட்டப் பணிகள்: கோவை ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டம், மதுக்கரை நகராட்சி, திருமலையம்பாளையம் பேரூராட்சி, ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மதுக்கரை மரப்பாலம் பகுதியில் ராஜேஸ்வரி நகரில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச் சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு சமையற்கூடத்தையும், ரூ.34.50 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் கூடம், மலையம்பாளையம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.39.40 லட்சம் மதிப்பீட்டில் பால்பதி கட்ரோடு பகு தியில் பேவர்பிளாக் உடன் சாலை அமைக்கும் பணி, சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம் பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பொதுசுகாதார கட்டடம், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் குமுட்டிபதி சாலை அமைக்கும் பணி, ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.ஆர் பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை பணி, ஸ்வச்பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் திடக் கழிவு மேலாண்மை பணி, ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.8.30 லட்சம் மதிப் பீட்டில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட் டத்தின் கீழ் ரூ.1.45கோடி மதிப்பீட்டில் புதிய எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.16.32 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி, ஸ்வச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பொதுசுகாதார கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், மாசித்திகவுண்டன்பதி நியாயவிலை கடையி னையும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மதுக்கரை நகர்மன்றத் தலைவர் நூர்ஜஹான் நாசர், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ்குமார், திட்டக்குழு உறுப்பினர் ராமு, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ரமேஷ்குமார், மதுக்கரை நகராட்சி ஆணையாளர் .பிச்சைமணி, உதவி இயக்குநர் பேரூராட்சி துவாரகநாத்சிங், நகர்மன்ற உறுப்பினர் ஷாலம்பாட்சா, ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி, ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில், மலையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img