தமிழ்நாடு கிராஃப்ட் கவுன்சில் சார்பில் சிருஷ்டி என்ற அனைத்து மாநில கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடக்க விழா இன்று (21-ந்தேதி) காலை 10:30 மணிக்கு சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது
விழாவில் சிருஷ்டி கன்வினர் வெங்கடலட்சுமி, தலைவர் மஞ்சுளா இளங்கோ உதவி தலைவர் ரூபா விஷ்ணு செயலாளர் ஜெயஸ்ரீ ரவி பொருளாளர் லட்சுமி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்
பின்னர் இது குறித்து அவர்கள் கூறியதாவது:-பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது இந்த கண்காட்சியில் 68 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
வருகிற 23ஆம் தேதி முடிய நடைபெறும் இந்த கண்காட்சியில்அனைத்து மாநில கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகள் சேலைகள் சுடிதார் உள்பட குழந்தைகளுக்கு ஆன ஆடைகள் முதல் பெண்களுக்கான சேலைகள் வரை பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த கண்காட்சி தினசரி காலை 10:30 மணி முதல்இரவுஎட்டு மணி வரை நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்