fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண் 6க்குட்பட்ட நேரு நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியின் தரைத்தளத்தில் 3 வகுப்பறைகள் மற்றும் முதல் தளத்தில் 3 வகுப்பறைகள் என மொத்தம் 6 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

உடன் உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் இராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர்கள் கணேசன், குமார், சுகாதார ஆய்வாளர் சந்திரன், பள்ளி தலைமையாசிரியர் சீதாலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img