கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.21-க்கு உட்பட்ட சரவ ணம்பட்டி, எல்.ஜி.பி.நகர் மாநக ராட்சி ஆரம்பப்பள்ளியில் பொதுநிதியி லிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட் டில் கூடுதல் வகுப்பறை மற்றும் அபிவிருத்தி பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து, தொடங்கி வைத்தார்.
வடக்கு மண்டலம் வார்டு எண்.11க்குட்பட்ட சரவணம் பட்டி, குமரன் வீதி, காந்தி வீதி ஆகிய பகுதிகளில் பொதுநிதியிலி ருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 300 மீட்டர் தொலைவிற்கு புதிதாக மழைநீர் வடிகால் கட்டுமானப் பணியை மேயர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
வடக்கு மண்டலம் வார்டு எண்.10-க்கு உட்பட்ட சரவ ணம்பட்டி, சத்தி பிரதான சாலையில் பொதுநிதியிலிருந்து ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 100 மீட்டர் தொலைவிற்கு புதிதாக மழைநீர் வடிகால் கட்டுமானப் பணியினையும், சரவணம்பட்டி, அம்மன் நகர் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 150 மீட்டர் தொலைவிற்கு புதிதாக மழைநீர் வடிகால் கட்டுமானப் பணியினையும் மேயர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
வார்டு எண்.10-க்கு உட்பட்ட சரவணம்பட்டி, பூம்புகார் நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்றுவரும் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
வடக்கு மண்டலம், வார்டு எண்.10-க்கு உட்பட்ட போயர் வீதி, ஆஸ்பத்திரி வீதி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (2022-2023) புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும், வார்டு எண்.19-க்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்((TURIP 2022-2023) 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால்
வடக்கு மண்டலம் வார்டு எண்.19-க்கு உட்பட்ட மணிய காரம் பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகளையும், கல்பனா லே அவுட் பகுதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மழைநீர் வடிகால் கட்டுமானப்பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.
கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். மேயருடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் பழனிசாமி (எ) சிரவை சிவா, பூங்கொடி சோமசுந்தரம், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் சக்திவேல், இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்டோர் ஆய்வின்போது இருந்தனர்.