சூலூரில் உள்ள விவசாயிகளின் இலவச மின்சா ரத்தை அரசு ரத்து செய்து வரும் நடவடிக்கைகளை நிறுத்தவிட்டால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை அதிமுக சார்பில் நடத்தப் போவதாக அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரி மலை பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நடைபெற்றது.
இதில் சூலூர் எம்எல்ஏ கந்தசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய எம்எல்ஏ கந்தசாமி, இங்கு உள்ள பி ஏ பி பாசன வாய்க்கால் மூலம் செய்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை துண்டிப்பு செய்து வருகிறார்கள்.
இலவசமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட இந்த மின்சாரத்தை துண்டிப்பு செய்யும் அரசை கண் டித்து அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத் தப்படும்.
அரசு உடனடியாக இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கொடுக்க வேண்டும். இங்குள்ள தார் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.