கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரச்சிற்றுண்டி வழங்கும் நிகழ்வை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தொடங்கி வைத்தனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19-க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மார்ச்/ஏப்ரல் 2023-ல் நடை பெறவுள்ள அரசு பொதுத் தேர்வுகளை எதிர் கொள்ள தயார் செய்யும் பொருட்டு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.
இதில் பங்கேற்கும் 5608 மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்ப டுகிறது. நிகழ்ச்சியில், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாநக ராட்சி கல்வி அலுவலர் ஜி.மரிய செல்வம், உதவி ஆணையர் மோகன சுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.