இந்தியாவின் மின்பொருள் மற்றும் கணிணி உற்பத்தியாளர்களின் முன்னணி பிரதி நிதியாக விளங்கும் இண்டஸ்டிரீ ஃபெடரேஷன் எல்சினா, கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், டெலி காம் மற்றும் கணிணி நிறுவனங்களுக்கான விற்பனைத் திறனுக்கு மேலும் வலு சேர்க்கும் நோக்கோடு, தமிழ்நாடு அரசுடன் இணைந்து மிகப்பெரிய உலகளாவிய கண்காட்சியான – 12-ம் சோர்ஸ் இந்தியா சங்க மத்தை வரும் 13, 14 தேதிகளில், சென்னை டிரேட் செண்டர், சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது.
சோர்ஸ் இந்தியா
சோர்ஸ் இந்தியா என்பது இந்திய மின் பொருள் ஹார்டுவேர் உற்பத்தியை அதிகரிக் கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த ஒரு பி2பி தளமாகும்.
12-ம் ஸோர்ஸ் -இந்தியா மாநாட்டின் நோக்கமாவது, இஎஸ்டிஎம் விற்பனையா ளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் இந்த சம்பந்தப்பட்டவர்கள் சந்திப்பின் மூலம் பன் மடங்கு விற்பனையை பெற வழிவகுப்பதன்மூலம் இந்திய எலக்ட்ரானிக் மற்றும் செமி-கண்டக்டர் தொழில் துறையின் முக்கியத்துவத்தை விளக்குவதும், அது சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பதுமாகும்.
எல்சினாவின் தலை வரும், பரிதாபாத்தில் உள்ள குளோப் கேப்பாசிடர்ஸ் பி. லிட். நிர்வாக இயக்கு நருமான சஞ்சய் அகர்வால் கூறியதாவது:
இந்தியாவின் தற்போதைய நிலையான இறக்குமதியை மிகவும் அதிக மாக சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, அதன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி யை வலிமைப்படுத்துவது அவசியமாகும்.
சோர்ஸ் இந்தியா என்பது உள் நாட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கு வதை மற்றும் உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு வருடாந்திர மாநாடாகும் என்றார்.