fbpx
Homeபிற செய்திகள்மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் மக்களுக்கு நீர்மோர், பழங்கள் விநியோகம்- செல்வராஜ் எம்எல்ஏ, மேயர்...

மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் மக்களுக்கு நீர்மோர், பழங்கள் விநியோகம்- செல்வராஜ் எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு

திருப்பூரில் நீர்மோர் பந்தலை வடக்கு மாவட்ட திமுகழக செயலாளரும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுமக்க ளுக்கு க. செல்வராஜ் எம் எல் ஏ, மாநகர மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பொங்கல், தர்பூசனி, நீர்மோர், பழங்களை வழங்கினர்.
மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் ஈ.பி.அ.சரவணனின் ஏற் பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருப் பூர் பி.என்-.ரோடு போயம் பாளையம் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலக பகுதியில் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சக் கரை பொங்கல் மற்றும் வாழைப்பழம், பப்பாளி பழம், தர்பூசணி, நீர்மோர் வழங்கப்பட்டது.

போயம்பாளையம் பகுதியிலுள்ள ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகம் அருகில் சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் க.செல்வராஜ் எம்.எல்.ஏ, தொமுச பேரவை மாநில துணை செயலாளர் டி.கே.டி.நாக ராசன், மேயர் தினேஷ் குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ பி.அ.சரவணன், பாண்டியன் நகர் பகுதி திமுகழக செயலாளர் வே.ஜோதி, மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர். ரெங்கசாமி, ஹோட்டல் தொமுச பொது செயலாளர் மகேஷ்குமார், 8வது வட்ட திமுகழக செயலாளர் வெள்ளைசாமி, 7வது வட்ட திமுகழக செயலாளர் செல்வராஜ், பாண்டியன் நகர் அவைத்தலைவர் தயானந்தம், 22 வது வார்டு கவுன்சிலர் இராதா கிருஷ்ணன், வேலம்பாளையம் பகுதி திமுகழக செயலாளர் இராமதாஸ், சிவபாலன், உள்ளிட்டவர்கள் நீர்மோர், முககவசம் உள்ளிட்ட வற்றை வழங்கினார்.

இதில் பெருமாநல்லூர் மின்சார வாரிய தொமுச செந்தில் (எ) பழனிச்சாமி, தொமுச நிர்வாகிகள் பெருமாநல்லூர் செந் தில் (எ) பழனிசாமி, ஈ.பி.ஜோதிபாசு, ஈ.பி.தேவா, ஆண்டிபாளையம் ரவி சிலவர் சரவணன், தொமுச நிர்வாகிகள் தண்டபாணி, கார்த்திகேயன், ஜின்னா பாய், விநாயக மூர்த்தி, சின்ராசு, கண்ணன், ராஜா மோகன், சின்னதுரை, சுதாகர், பொன்னுசாமி, பால்ராஜ் மற்றும் தொமுச நிர்வாகிகளும் கழக நிர்வாகிகளும் மின்வாரிய தொழிலாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ.சரவணன் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img