காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத் தின் புதிய முதல்வராக (டீன்) டாக்டர் நிதின் மதுசூதன் நகர்கர் பொறுப் பேற்றார்.
பணியில் நோயாளிக ளின் நலன், மருத்துவ கல்வி,மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப் புகளில் தனது செயல்பாடு உச்சம் தொடும் அளவிற்கு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய முதல்வராக (டீன்) பொறுப்பேற்றுள்ள டாக்டர் நிதின் மசூதன் நகர்கர் ராய்ப்பூர் எய்ம்ஸ் (AIIMS Raipur) நிறுவனத்தின் இயக்குநராக 11 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
இவர் போப்பால் எய்ம்ஸ் (AIIMS Bopal) நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் கூடுதல் பொறுப்பாக பணியாற்றியுள்ளார்.
காது, மூக்கு, தொண்டை (ENT) அறுவை சிகிச்சையில் முதுகலை பட்டம் பெற் றுள்ளார். டாக்டர் நிதின் மசூதன் நகர்கர் காது, மூக்கு,தொண்டை , தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சையில் நிபுணரான டாக்டர் நிதின் மசூதன் நகர்கர் புற்றுநோய் சிறப்பு சிகிச்சையில் ஆர்வம் உள்ளவர்.
100-க்கும் மேற்பட்ட அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டுள்ள டாக்டர் நிதின் மசூதன் நகர்கர் நாட்டில் முக்கியமான குழுக்களில் உறுப்பினர் பதவியில் உள்ளார்.
இவர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல்வேறு மருத்துவ நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது மருத்துவ பணி அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.