கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் பந்தய சாலையில் உள்ள ஜி.டி.வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
உடன் உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் ஃபார்மான் அலி, பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.