fbpx
Homeபிற செய்திகள்மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் - பொங்கல் பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கம்

மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் – பொங்கல் பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கம்

தமிழக அரசின் கூட் டுறவு நிறுவனமான கோ&ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங் களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதம் உள்ள கோ&ஆப்டெக்ஸ் விற் பனை நிலையங்கள் மூல மாக சந்தைப்படுத்தி நெச வாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.

கோ&ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு இரக உற்பத்தியில் பாரம்பரிய மாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத் திற்கேற்ற புதிய வடிவ மைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ&ஆப் டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது.

கிறிஸ்துமஸ் 2023 மற்றும் பொங்கல் 2024 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ&ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலை யங்களிலும் 1.12.2023 முதல் 30% அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது.

இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்க விழா கோ&ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் கோவை கிறிஸ்ட் அரசர் ஆலயம், அருட்தந்தை ஆரோக்கிய சாமி 19.12.2023 அன்று காலை 11 மணியளவில் குத்து விளக் கேற்றி துவக்கி வைத்தார். விழரிவல் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்க ளால் உற்பத்தி செய் யப்பட்ட புதிய வடிவ மைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மக ளிர் விரும்பும் சுடிதார் இரகங்கள் ஆர்கானிக் பருத்தி ஆலைகள் மற் றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் இரகங்கள் ஏராளமாக தரு விக்கப்பட்டுள்ளன.

கோவை மண்டலத்தில் கிறிஸ்துமஸ் & பொங்கல் 2024 விற்பனை இலக் காக ரூ.6.75 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர சீட்டு திட்ட மும் அரசு ஊழியர்களுக்கு கடன் விற்பனையும் கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் இவ்வசதி உள்ளது.

விழாவில் கோ&ஆப் டெக்ஸின் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், முது நிலை மேலாளர் (இரகம்& பகிர்மானம்) ஜெகநாதன், மற்றும் கோ&ஆப்டெக்ஸ் அலுவலக பணியாளர்கள் கோ&ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை மேலாளர் செல் வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img